Connect with us

Tamizhanmedia.net

90 களில் உச்சத்தில் இருந்த ஹீரோ நடிகரா இது? பிரபல நடிகைகளுடன் ஒரு புகைப்படம் – 18 வருடமாக சினிமாவிட்டு விலகியவர் கொடுத்த சர்ப்பிரைஸ்

CINEMA

90 களில் உச்சத்தில் இருந்த ஹீரோ நடிகரா இது? பிரபல நடிகைகளுடன் ஒரு புகைப்படம் – 18 வருடமாக சினிமாவிட்டு விலகியவர் கொடுத்த சர்ப்பிரைஸ்

90 களில் காதல் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் நடிகர்களில் ஒருவர் ராஜா. பாக்கு வெத்தல படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இவர் ராம நாராயணன், பாரதி ராஜா, எஸ்.ஏ.சந்திர சேகர் என எத்தனையோ இயக்குனர்களுடன் பணியாற்றிவர். ஹீரோவாகவும், ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்திலும் தொடர்ந்து 90 களில் பல படங்களில் நடித்து வந்த இவர் முரளி, தேவயானி, விந்தியா நடித்த கண்ணுக்கு கண்ணாக படத்தில் நடித்திருந்தார். 2000 ம் வருடத்திற்கு பின் 19 வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் கடந்த 2019 ல் ஆதித்யா வர்மா படத்தில் நடிகரின் விக்ரமனின் மகனான துருவ்-க்கு அப்பாவாக நடித்திருந்தார்.

நடிகர் ராஜாவின் படங்களில் முக்கியமானது கருத்தம்மா. பாரதி ராஜாவின் இயக்கத்தில் வந்த இந்த கிராமத்து கதை ( பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிகொ லைசெய்வது) பெரும் கவனத்தை ஈர்த்து தேசிய விருது, தமிழக அரசு விருதையும் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 90 களில் பிரபலங்களாக சினிமாவை வலம் வந்த ராதிகா, நிரோஷா, பிரபு, சுஹாசினி, நதியா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, ரேகா என பலர் ஒன்றாக சந்தித்து புகைப்படம் எடுக்க அது தற்போது வெளியாகியுள்ளது.இதில் நடிகர் ராஜாவும் இருக்கிறார் பாருங்கள்…

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top