உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் கேமிங் விளையாட்டான பப்ஜி மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், அதில் வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சவாலை அல்லது ‘டாஸ்க்’-கை வெற்றிகரமாக முடித்தால் ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும் என்று நம்பியுள்ளார். இந்த ஆசையின் காரணமாக, தனது பெற்றோருக்குத் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு திடீரென வெளியேறியுள்ளார்.
சிறுவன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சிறுவனின் மொபைல் போன் சமிக்ஞைகளை கொண்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் முடிவில், மதுரா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் அந்த சிறுவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் அவனைக் கண்டுபிடித்தனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுவனைப் காவல்துறையினர் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆன்லைன் கேம்களின் ஆபத்து குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…
சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…