தென்னிந்திய திரை உலகில் 70 மற்றும் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லதா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகையாக இருந்தார். கடந்த 1973 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் லீட் கேரக்டரில் நடித்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவருடைய புகைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் டீமில் காட்டப்பட, புதுமுகம் ஒருவரை தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆர் தன்னுடைய அம்மாவை கன்வென்ஸ் செய்து தன்னை நடிக்க வைத்ததாக லதா தனது பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் முறை எம்ஜிஆரை பார்த்தபோது அவர் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டு லதா வியப்படைந்துள்ளார்.
தொடர்ந்து தனக்கு எம்ஜிஆர் பிச்சர்ஸ் நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தான் தன்னுடைய அறிமுகப்படுத்திய ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றது மறக்க முடியாத நிகழ்வு எனவும் கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆர் குறித்த பல சுவாரசியமான தகவல்களையும் லதா பகிர்ந்தார். அதாவது தனக்கு நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம் மற்றும் பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக தன்னை 5 வருடம் காண்ட்ராக்ட் போட்டு ஒப்பந்தம் செய்தனர். தான் அறிமுகம் செய்யும் நடிகைகளின் கால்சூட்டுக்காக தானே காத்திருக்கும் படி நேர்வதால் இப்படி ஒப்பந்தம் போட்டனர்.
தன்னுடைய முதல் படத்திலேயே எம்ஜிஆர் இயக்கத்தில் நடித்ததாகவும் அந்த படத்தில் வித்தியாசமான ஆங்கிலேயர்களை எம்ஜிஆர் முயற்சி செய்ததாகவும் ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்ததாகவும் லதா கூறியுள்ளார். மேலும் சில நேரங்களில் வெளிநாடு செல்லும் போது எம்ஜிஆர் தன்னுடைய அம்மா பொறுப்பில் தான் என்னை விட்டு செல்வார். மற்றவர்களுடன் அதிகமாக சிரித்து பேசக்கூடாது எனவும் அப்படி பேசினால் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள் எனவும் எம்ஜிஆர் பலமுறை தன்னிடம் கூறியுள்ளார்.
ஆனால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் என தனக்கு அறிவுரையும் கூறியுள்ளார். பெரும்பாலும் அவரைக் கேட்டு தான் நான் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்தேன். தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஏண்டி ராமராவ், மலையாளத்தில் பிரேம் நசீர், மம்முட்டி என பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். நான் சினிமாவில் நடிக்க காரணமே எம்ஜிஆர் தான். அவர் அந்த அளவிற்கு எனக்கு உதவி செய்துள்ளார். சின்னத்திரையிலும் இன்று நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அனைத்துக்கும் எம்ஜிஆர் மட்டும்தான் காரணம். அவர்தான் என்னுடைய ஆசான் என்று லதா உருக்கமாக பேசியுள்ளார்.
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…