மும்பை தஹிசர் மேற்கு பகுதியில் உள்ள மகேஷ்வர் கட்டிட குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் போனட்டிற்குள் சுமார் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக வனவிலங்கு மீட்பாளர் சமீர் குப்தாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர், காரின் போனட்டைத் திறந்து, என்ஜின் பகுதிக்கு நடுவே சிக்கியிருந்த மலைப்பாம்பைச் சாதுரியமாகப் பிடித்துப் பைக்குள் அடைத்தார். இந்த மீட்பு நடவடிக்கையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/Dc7qHVVCJDJ/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==
மீட்கப்பட்ட மலைப்பாம்பிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து, அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா வனப்பகுதியில் அது பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…