“ஒரே ஆளு தான் ஆனா பேர் மட்டும் 11…” 30 ஆண்டுகளாக போலீசாரை ஏமாற்றிய 64 வயது மோசடி ஆசாமி…. போலி பாஸ்போர்ட், அடையாள அட்டை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

Spread the love

கேரளாவைச் சேர்ந்த 64 வயதான சாம் பீட்டர் என்பவர், தன்னை தேசிய புலனாய்வு முகமை மற்றும் நேஷனல் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பியூரோ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் உயரதிகாரி எனக் கூறிக்கொண்டு பல மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் சாம் பீட்டர், ராகுல் பீட்டர், ராஜேஷ் ராபின்சன், ராய் ஜேக்கப் உள்ளிட்ட 11 வெவ்வேறு பெயர்களில் போலி அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். சட்டப் பிரச்சனைகள் மற்றும் வரி விவகாரங்களில் இருப்பவர்களைக் குறிவைத்து, வழக்குகளை முடித்துத் தருவதாகக் கூறிப் பலரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராகக் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் சுமார் 17 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சாம் பீட்டரை, மங்களூரு நகர போலீசார் செப்டம்பர் 1-ஆம் தேதி கேரளாவின் கண்ணூரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

1 மணத்தியாலம் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

2 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

2 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago