Categories: சினிமா

பொங்கலுக்கு ரிலீசாக காத்திருக்கும் 6 படங்கள்.. முன்னாள் மாமனாருடன் மோதும் மாப்பிள்ளை தனுஷ்…

Spread the love

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதுவும் குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளிக்கு அந்த திரைப்படங்கள் ரிலீசானால் சொல்லவே வேண்டியது இல்லை. அவர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான். அப்படி அடுத்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ரிலீசாகும் 6 படங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

1.லால் சலாம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு , தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இத்திரைப்படம் ஜனவரி 12 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

2. கேப்டன் மில்லர்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் தனுஷ். தனுஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் இதற்கு முக்கிய காரணம் வரலாற்று கதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இதயப்படுத்தல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதும் இத்திரைப்படம் பொங்கல் என்று ரிலீஸ் ஆக உள்ளது.

3.அயலான்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை ‘இன்று நேற்று நாளை’  இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

4. அரண்மனை 4:

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து அரண்மனை, அரண்மனை 2,  அரண்மனை 3, தற்போது அரண்மனை 4 என நான்கு பாகங்களை எடுத்துள்ளார். பேய் கதையை கொண்டு திரில்லர் படபாணியில் எடுக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இத்திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

5.குண்டூர் காரம்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் குண்டூர் காரம் தான். இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமும் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும்.

6.மெர்ரி கிறிஸ்மஸ்:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் மெர்ரி கிறிஸ்மஸ். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். பல தடவை ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இத்திரைப்படமானது வரும் ஜனவரி 12 பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.

Begam

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

3 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago