தமிழக அரசின் நிதி உதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பாக 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பிவிஆர் ராயப்பேட்டை, பிவிஆர் மயிலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டது.
குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் நிறைவில் சிறந்த படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நிறைவு விழா நேற்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் சிறந்த நடிகர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
அதன்படி சிறந்த நடிகருக்கான விருது மகாராஜா திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளியான மகாராஜா திரைப்படம் இந்தியாவில் பயங்கர வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது சீனாவிலும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
அடுத்ததாக அமரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவி வென்றார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
அடுத்து மெய்யழகன் திரைப்படத்திற்காக மக்களுக்கு பிடித்த நடிகர் என்ற பிரிவில் விருதை வென்றார் நடிகர் அரவிந்த்சாமி. இந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
அடுத்ததாக வேட்டையன் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. இந்த வருடம் ரஜினி மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
அடுத்ததாக லப்பர் பந்து படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் தினேஷ் வென்றார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகின்றனர்.
அடுத்ததாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நடிகர் ஜி.வி பிரகாஷ் வென்ற நிலையில் வாழை படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பொன் வேல் வென்றார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…