உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், கோட்வாலி பகுதியில் உள்ள நவ்யுக் மார்க்கெட்டில் அமைந்துள்ள மதுபான பாரில், காவல் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள், அங்கு சலசலப்பை ஏற்படுத்துவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு கான்ஸ்டபிள் ஒரு கேண்டீன் ஊழியரை பெல்ட்டால் அடிப்பதையும், மற்றொரு கான்ஸ்டபிள் கேண்டீன் உரிமையாளரை திட்டுகிறார்.
வைரலாகும் வீடியோவில், அவர்கள் முன் மேஜையில் மது மற்றும் பீர் பாட்டில்கள்இருக்கிறது. ஆனால் சிற்றுண்டிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டபோது, இரண்டு கான்ஸ்டபிள்களும் கோபமடைந்து, ஊழியரை பெல்ட்களால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். கேண்டீனில் இருந்த மற்றவர்கள் இந்த சம்பவத்தை படம்பிடித்து அதை வெளியிட்டார்கள். சட்டத்தை மதிக்க வேண்டியவர்கள் சட்டத்தை இப்படி மீறுகிறார்களே என்று மக்கள் கூறி வருகிறார்கள். இதனையடுத்து இந்த வீடியோ வைரலான பிறகு, இரண்டு கான்ஸ்டபிள்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…