உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏத்வா மாவட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அந்தச் சிறுவன் தெருவில் குப்பை அள்ளி அதன் மூலமாக வரும் வருமானத்தில் சாப்பிட்டு வந்துள்ளான். உடற்கூறு ஆய்வுவில் நாய் கடித்ததால் தான் சிறுவன் உயிர் இழந்தான் என்று உறுதி ஆனது.
வளர்ப்பு நாயின் உரிமையாளரை ஆகஸ்ட் 31 போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுவனின் கழுத்தில் ஐந்து முறை நாய் கடித்ததாகவும், அரை அங்கலம் பல் தடம் கழுத்தில் பதிந்திருந்ததாகவும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த உரிமையாளரின் வீட்டிற்கு அச்சிறுவன் வந்துள்ளான் அப்போதுதான் கடித்துள்ளது. வீட்டின் கூரை மேலிருந்து குதித்து சிறுவனை தாக்கியுள்ளது. சிறுவன் கத்தி கதறியும் அங்கு அவனுக்கு உதவயாரும் இல்லை. நாயின் சத்தம் கேட்டு தெருநாய்களும் சேர்ந்து சிறுவனை கடித்துள்ளது.
அந்த வழியாக வந்த வழிப்போக்கர்கள் பார்த்து நாய்களை துரத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அச்சிறுவன் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளான். போலீசாருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் ரத்த இழப்பால் சிகிச்சை கொடுத்தும் உயிரிழந்துள்ளான். சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் மக்கள் கடந்த சனிக்கிழமை அதே நாள் இந்த பகுதியில் இரண்டு தொழிலாளர்களை கடித்ததாகவும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த நாய் நீண்ட நாட்கள் ஆகவே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…