Categories: CINEMA

பிரபல கிரிக்கெட் வீரரோடு…. தலைவாசல் விஜய் மகளுக்கு முடிந்தது நிச்சயம்…. விரைவில் டும் டும்…. வெளியான போட்டோஸ்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் தலைவாசல் விஜய் சிறந்த நடிகராக வலம் வந்த பிரபலங்களில் ஒருவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

1992 ஆம் வருடம் தலைவாசல் என்ற படத்தில் அறிமுகம் ஆகியதால் இவர் தலைவாசல் விஜய் என்ற அடையாளத்தோடு அழைக்கப்படுகிறார்.

இவர் தன்னுடைய முதல் படத்தில் ஒரு பாடகராக அறிமுகம் ஆகி அதன் பிறகு தேவர் மகன் திரைப்படத்தில் கமலுடைய சகோதரராக நடித்துள்ளார்.

மகாநதி படத்தில் கமலின் மகனை தத்தெடுப்பவர் ஆகவும், மகளிர் மட்டும், கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை என பல ஹிட் படங்க்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் அஜித் நடித்த உன்னை நினைத்து திரைப்படத்தில் கவலைப்படாதே சகோதரா என்னும் பாடல் மூலமாக மனதை வென்றவர்.

இவருடைய டான்ஸ்ம் பர்பாமன்ஸ்சும் ரசிகர்களால் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.

இவர் கடைசியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அழகு சீரியலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவருடைய மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் தான்.

இவர் பல நீச்சல் போட்டிகளிலும் பங்கு பெற்று பல பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை  தேடி தந்துள்ளார்.

இவருக்கும் பிரபல இந்தியா ஏ அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து வரும் கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

பாபா அபராஜித்  ராஞ்சி கோப்பைக்காக தமிழகத்தின் அணிக்காக விளையாடியவர்.

அதேபோல 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை ஜெயவீணா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

admin

Recent Posts

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆர சமாளிக்குறது ஈசி… ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்… ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

4 mins ago

பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா.. வீடியோவை வெளியிட்ட முன்னாள் கணவர் கார்த்திக் குமார்.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

பிரபல பாடகியான சுசித்ரா தனது கணவர் மீதும், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களின் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து…

1 hour ago

பிக் பாஸ் ரவீனாவா இது..? டிரான்ஸ்பரென்ட் சேலையில்.. கலக்கலாக வெளியான வைரல் போட்டோஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ரவீனா எப்போதும் மாடன் உடையில் வலம் வருவார். ஆனால் தற்போது வித்தியாசமாக புடவை…

2 hours ago

முடிவுக்கு வந்த வாடிவாசல் பஞ்சாயத்து.. ஆனா சூர்யாவ நினைச்சா தான் கொஞ்சம் பாவமா இருக்கு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்நடிகர் சூர்யா. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே…

3 hours ago

“இதுவரைக்கும் சினிமாவுக்காக என்ன கிழிச்சிருக்கீங்க.. அத சொல்ல என்ன உரிம இருக்கு?”- விஷாலை கடுமையாக விமர்சித்த காதல் சுகுமார்!

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல்'. இந்த படத்தின்…

3 hours ago

விஜய் படத்தை தயாரிக்க மறுத்ததா RRR பட நிறுவனம்.. அப்ப சம்பளம் தான் பிரச்சனையா..? வெளிவந்த காரணம்..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்…

3 hours ago