மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகை ரிங்கே கண்ணா அவரின் கணவரா இது…? நம்பவே முடியல : இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தமிழ் சினிமா உலகில் பொறுத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கொடுக்கபடுவதில்லை. காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளனர். நடிகர்கள் எவ்வளவு வயதானாலும் இன்றளவும் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.

ஆனால் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பின் அவர்களுக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் சில நடிகைகள் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானாலும் அதன் பின் ஆளே அடையாளம் தெரியாமல் போய் விடுகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள். அந்த காலத்தில் முன்னணி நடிகராக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததன் மூலம் சினிமாவில் நடிப்பதை சில காலம் தவிர்த்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்படி இருக்கையில் 2001-ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மஜ்னு.

இந்த படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றதோடு இந்த படத்தின் பாடல்கள் அணைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். இந்த படத்தில் பிரசாந்த்க்கு ஜோடியாக நடித்தவர் தான் ரிங்கே கண்ணா. 43-வயதான இவர் மும்பையை சேர்ந்தவர் மேலும் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் வளர்ந்த பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தமிழில் முதன் முதலாக நடித்த படம் தான் மஜ்னு.இதுவே தமிழில் அவரது இறுதி படமும் கூட.

இந்நிலையில் இவருக்கு சினிமா வட்டாரங்களில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராத நிலையில் 2003-ம் ஆண்டு சமீர் சரண் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட்டார்.

இவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஹிந்தி சினிமாவில் நடிகர்களாக உள்ளார்கள். இவ்வாறான நிலையில் அவ்வபோது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு மட்டும் வந்து செல்கிறார் ரிங்கே கண்ணா. சமீபத்தில் இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அதை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வயதிலும் கொஞ்சமும் இளமை மாறாமல் இருக்கும் அவரை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *