கொழுகொழு அழகால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஜோதிகா. இவர் ஹிந்தி சினிமாவில் நடித்து தனது சினிமா கெரியரை தொடங்கினார். இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் ‘வாலி’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் , சிநேகிதியே ,குஷி, பூவெல்லாம் உன் வாசம் ,பிரியமான தோழி, காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முடிவு கட்டிய ஜோதிகா தற்பொழுது தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தற்பொழுது மும்பையில் தனது குடும்பத்துடன் செட்டிலாகியுள்ள நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ‘வாலி’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துதான் அறிமுகமானார் என பார்த்தோம். ஆனால் இதற்கு காரணம் என்ன தெரியுமா..? இது குறித்து ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது வாலி திரைப்படத்தில் முதன் முதலில் எஸ் ஜே சூர்யா ஜோதிகா வைத்தான் நடிக்க கேட்டிருந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் ஹிந்தியில் ஒரு பட வாய்ப்பு வந்ததால் அவர் அதில் நடிக்க சென்று விட்டாராம். இதனால் சிம்ரன் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இருந்தாலும் எஸ்.ஜே சூர்யா ஜோதிகாவிடம் இந்த படத்தில் ‘ஒரு சிறு ரோலாவது நடிக்க முடியுமா?’ என்று கேட்டதற்காக அவர் ‘கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன்’ என்று தான் செய்த தவறை சரி செய்துள்ளார்.