Categories: CINEMA

கொஞ்சமாவது அறிவு இருக்கா..? 10-ம் வகுப்பு படிக்கிற பொண்ண இப்படியா நடத்துவீங்க.. கொந்தளித்த விஜே அர்ச்சனா..!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அவரது சாதனையை பலரும் புகழ்ந்து பேசி வந்தாலும், அவரது உருவத்தை பார்த்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜே அர்ச்சனா பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் அர்ச்சனா தெரிவித்திருந்ததாவது “என்னுடைய கடந்த இன்ஸ்டா ஸ்டோரியை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதை பார்க்கும்போது உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 10-ம் வகுப்பு படித்து முடித்த ஒரு மாணவி இனிமேதான் அடுத்த ஒரு கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். 12-ம் வகுப்பில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அதைத் தொடர்ந்து இந்த உலகை பார்க்கப் போகிறார். கல்லூரிக்கு செல்ல போகிறார்.

ஆனால் அதையெல்லாம் சிறிது கூட யோசிக்காமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார்கள். சரியானவற்றை பேசியதாக வேண்டும். சரியானவற்றை பேச வேண்டும் என்பதற்கு அடிப்படை விதிகள் இருக்கின்றது என்றால் மக்களுக்கு அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமையும் இருக்க வேண்டும் எங்கு நாம் அநியாயம் நடக்கின்றதோ? அதனை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது.

ஒரு சிறிய பெண் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்திருக்கின்றார். அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அவருடைய முகத்தோற்றம் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகின்றது. சைபர் புல்லிங் என்பது மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சைபர் கிரைம் போலீசார் இடம் சென்று புகார் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.

ஒரு நாளைக்கு 1000 புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு செல்கின்றது. அதற்கு நாம் சரியான சட்ட அமைப்பை கொண்டு வர வேண்டும். நான் உண்மையில் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நான் இதை நினைத்து மிகவும் அசிங்கப்படுகிறேன்” என்று பேசியிருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

12 mins ago

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…

2 hours ago

என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…

3 hours ago

அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது.. ஆவேசத்துடன் GV பிரகாஷ் வெளியிட்ட பதிவு.. வைரல் பதிவு..!

இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…

3 hours ago

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

4 hours ago

பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா.. வீடியோவை வெளியிட்ட முன்னாள் கணவர் கார்த்திக் குமார்.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

பிரபல பாடகியான சுசித்ரா தனது கணவர் மீதும், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களின் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து…

5 hours ago