Categories: CINEMA

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார். இந்த திரைப்படம் தொடங்கியது முதலே பல பிரச்சனைகளை சந்தித்தது.

முதலில் இந்த படத்தை யார் இயக்குவது என்று தொடங்கிய பிரச்சனையில் கடைசியாக மகிழ்ந்திருமேனி விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குவதாக ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து லைக்கா ப்ரொடக்ஷன் தற்போது நிதி பிரச்சனையில் சிக்கி இருப்பதால் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே இருந்தது.

ஒரு வழியாக தற்போது தான் படப்பிடிப்பு முடிய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆப்ரேஷன் நடைபெற்றதால் அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித். மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பாமல் சென்னையிலேயே இருந்து வருகின்றார் அஜித். இப்படி தொடர்ந்து பல விஷயங்கள் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாட்டை காணோம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியாமல் இருப்பதால் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று கூறி வருகிறார்கள். இதற்கிடையில் வேட்டையின் திரைப்படமும் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீசாக போவதில்லை என்று கூறியவுடன் நடிகர் ரஜினியின் வேட்டையின் திரைப்படம் முந்தி கொண்டது. தீபாவளி அன்று வேட்டையின் திரைப்படம் வெளியாகும் என பலரும் கூறி வருகிறார்கள். தீபாவளி என்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டி ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் சற்று கோபமடைந்து இருக்கிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

20 நிமிடங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

49 நிமிடங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

15 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

15 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

15 மணி நேரங்கள் ago

திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் தடையற தாக்க என்ற…

15 மணி நேரங்கள் ago