படத்திற்காக தனது தாடியை தியாகம் செய்த பிரபல நடிகர்!… இவர்தானா!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

படத்திற்காக தனது தாடியை தியாகம் செய்த பிரபல நடிகர்!… இவர்தானா!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

நடிகர் ஆர் ஜே பாலாஜியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரேடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே பாலாஜி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். யோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் ஆர்.ஜே வாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்று ஆர்.ஜே பாலாஜி இப்பொழுது கதாநாயகனாக வளர்ந்துள்ளார். இவர் தமிழில் ‘எல் கே ஜி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படத்தை இவர் இயக்கியும் நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஆர் ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதில் சலூன் நடத்தும் நபராக இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிட்டு நடிகர் பாலாஜி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam