Categories: CINEMA

அப்படி போடு… தாறுமாறாக உருவாகவுள்ள ‘தளபதி 68’… வெளியான சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

லியோ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘தளபதி 68’ அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது.  இதைத்தொடர்ந்து சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிந்தது. இந்த பூஜை வீடியோவை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்று படக்குழு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும்,  அதன்படி தளபதி 68 படக்குழு பேங்காக் சென்று சேசிங் காட்சி ஒன்றை எடுக்க இருப்பதாகவும், இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த தளபதி ரசிகர்கள் தற்பொழுது படுகுஷியில் உள்ளனர்.

Begam

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

15 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago