Categories: HISTORY

ஜீரோ முதல் 1200 கோடி பிசினஸ்.. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் கிலோ.. பன்னீர் உலகின் ஜாம்பவான்.. Milky Mist உருவான வரலாறு..!

ஒரு சின்ன விவசாய குடும்பத்தில் பிறந்து தனது தந்தையின் தொழிலை எடுத்து நடத்தி தற்போது 1200 கோடி பிசினஸ் செய்யும் மில்க் மிஸ்ட் நிறுவனத்தின் ஓனர் சதீஷ் பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

சதீஷ் அவர்களின் தந்தையும், அவரின் அண்ணன் தம்பிகளும் முதலில் விசைத்தறி வணிகம் செய்து வந்தனர். மூன்று வருடம் அதனை நடத்திய பிறகு வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். அதன் பிறகு தான் பால் வணிகத்தில் ஈடுபட்டனர். அருகில் மாடு வைத்துள்ளவர்களிடமிருந்து பால் வாங்கி அதனை பெங்களூருக்கு ஏன் மூலம் அனுப்பி வைக்க தொடங்கினர். ஒரு நாளைக்கு 3000 லிட்டர் பால்களை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் அதில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாததால் முதலில் அவரின் சித்தப்பா இந்த வணிகத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேறினார். அதன்பிறகு 1992 ஆம் ஆண்டு சதீஷ் அவர்களின் தந்தையும் இந்த வணிகத்தை மூடிவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் அப்போதுதான் சதீஷ் இந்த வணிகத்தை எடுத்து நடத்த முன் வந்தார்.

வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவரை நீ படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று குடும்பத்தினர் யாரும் அவரை வற்புறுத்தவில்லை. பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வியாபாரம் செய்வதில் இறங்கினார். அப்போது அவருக்கு 16 வயது பால் வணிகத்தினை பெரிதாக செய்ய எண்ணிய சதீஷ் தனது வாடிக்கையாளர் பெங்களூருவில் தங்களிடமிருந்து பெற்ற பாலை பன்னீர் செய்து வெவ்வேறு லாபத்திற்கு விற்பதை கண்டுபிடித்தார் .

இதை யோசித்த அவருக்கு வியாபாரத்தில் புதிதான யுக்திகளை முயற்சி செய்தால் மட்டுமே நம்மால் வெல்ல முடியும் என்பதை உணர்ந்தார். அதனையடுத்து நாமும் பன்னீர் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்கு எண்ணம் தோன்றியது. ஏனென்றால் அந்த சமயத்தில் பன்னீர் என்பது வடநாடுகளில் செய்யப்படும் ஒரு பொருள் என்றும் அதனை அவர்கள் தான் அதிக அளவில் விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்.

ஆனால் இன்று தமிழகத்தில் பலரும் பன்னீரை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். சூடான பாலில் வினிகர் சேர்த்து பன்னீர் செய்ய முடியும் என்பதை கண்டறிந்து முயற்சி செய்த இவருக்கு தரமான பன்னீர் கிடைத்தது. முதன் முறையாக 1993ஆம் ஆண்டு 10 கிலோ தண்ணீரை பெங்களூருக்கு அனுப்பினார். மொத்த உணவகங்களின் காண்ட்ராக்ட்டுகளை பிடித்து அங்கு அதிகளவு பன்னீரை கொடுக்க தொடங்கினார்.

1995 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிலோ தண்ணீரை எந்த பிராண்ட் பெயர் இல்லாமல் விற்பனை செய்து வந்தார். 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக பால் வணிகத்தை விட்டுவிட்டு பன்னீர் மட்டும் செய்வதில் கவனம் செலுத்தி வந்தார். இரண்டு வருடத்தில் வணிகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதற்குப் பிறகுதான் பிராண்ட் பெயர் தேவைப்பட்டது. இதனால் மில்கி மிஸ்ட் என்ற பெயரை தேர்வு செய்து ரீடைல் பிரிவில் இறங்கி விற்பனை செய்ய தொடங்கினார்.

இயந்திரங்களை வாங்க வேண்டும் என்பதற்காக 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். 1998 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாயை வங்கியில் இருந்து கடனாக பெற்று செமி ஆட்டோமேட்டிக் நிறுவனத்தை துவங்கினார். காலத்திற்கு ஏற்ற வகையில் இயந்திரங்களைக் கொண்டு வந்து அதில் வணிகம் செய்யத் தொடங்கினர் . 1990 ஆம் ஆண்டுகளில் மில்கி மிஸ்ட் பன்னீர் சென்னை பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் விற்பனை வளர்ச்சி அதிகரித்தது.

2001 ஆம் ஆண்டு வாடகைக்கு இருந்த தயாரிப்பு ஆலையிலிருந்து சொந்த கட்டிடத்திற்கு மாறினார்கள். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு பன்னீர் விற்பனையுடன் சேர்த்து நெய் தயிர் போன்ற உற்பத்திகளை செய்ய தொடங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு முதன் முறையாக நிறுவனத்திற்கு லோகோ ஒன்றை உருவாக்கி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய தொடங்கினார்கள். இப்போது தென் இந்தியா முழுவதும் பன்னீர் என்றால் மில்கி மிஸ்ட் என்ற அளவுக்கு மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றது.

மில்கி மிஸ் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 40000 முதல் 50,000 லிட்டர் பால் தேவைப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகின்றது. ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பெரும் அளவு பால் கொள்முதலை இந்த நிறுவனமே செய்து வருகின்றது. இதன் மூலமாக மாடு வளர்ப்பிற்கு ஐந்து ரூபாய் கூடுதலாக கிடைக்கின்றது.

இப்படி தனது தொழிலை படிப்படியாக முன்னேற்றி ஜீரோவில் இருந்து 1200 கோடி வரை தனது பிசினஸை உயர்த்தி இருக்கின்றார். சதீஷ் ஒரு நாளைக்கு மட்டும் 60 ஆயிரம் கிலோ பன்னீர் தயார் செய்யப்படுவதாக அவர் கூறியிருந்தார். இவர் அனிதா என்கின்ற கணினி பட்டதாரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் மற்றும் நித்தின் என இரண்டு மகன்கள் உள்ளன. தொழிலில் மிகப்பெரிய அளவு சாதித்து இருக்கும் இவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

4 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

4 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

5 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

10 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

11 மணி நேரங்கள் ago