Categories: CINEMA

ஆள விடுங்கடா சாமிகளா-STR 48 திரைப்படத்தை கிடப்பில் போட்டதுக்கு இதுதான் காரணம்! சிம்பு கடுப்பில் செய்த காரியம்…

“ஈஸ்வரன்”, “மாநாடு” போன்ற திரைப்படங்களின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு “வெந்து தணிந்தது காடு”, “பத்து தல” ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து “STR 48” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆனால் இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இத்திரைப்படத்தை குறித்து வெளிவரவில்லை. இத்திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு திரைப்படம் என்று தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு சிம்பு தனது உடலை சிக்கென குறைத்திருந்தார். சிம்புவின் கெட்டப்பும் அதிகளவு ரசிக்கப்பட்டது.

ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதா இல்லையா என்பது குறித்தான எந்த தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஆதலால் இத்திரைப்படத்தை சிம்பு டிராப் செய்துவிட்டார் என்றே வதந்திகள் பரவி வந்தன. மேலும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் “தக் லைஃப்” திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் “STR 48” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“ஓவ்வொரு முறையும் STR 48 திரைப்படத்தை குறித்து விசாரிக்கும்போதெல்லாம் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துவிடும் இப்போது ஆரம்பித்துவிடும் என தகவல் வரும். ஆனால் சிம்பு ஒரு கட்டத்தில் சோர்வடைந்துவிட்டார். என்னைய விட்டுடுங்க், எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு கூப்புடுங்க, அதுக்குள்ள நான் இன்னொரு படம் பண்ணிட்டு வந்துடுறேன் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் சிம்பு கூறிவிட்டார்.

தக் லைஃப் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதால் நீங்கள் வேண்டுமானால் தக் லைஃப் திரைப்படத்தில் நடியுங்கள் என கூறி சிம்புவிற்கு வாய்ப்பளித்தார்கள். எனினும் STR 48 திரைப்படத்தை சிம்பு விடுவதாக இல்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் அத்திரைப்படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது” என்று அந்தணன் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி “தக் லைஃப்” திரைப்படத்தில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே அத்திரைப்படத்தில் சிம்பு உள்ளே புகுந்ததுதான் என்று சில தகவல்களும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago