Categories: CINEMA

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காளை.. தக் லைஃப் படத்தில் மாஸாக காரில் என்ட்ரி கொடுத்த சிம்பு.. வெளியான டீசர்..!

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திலிருந்து சிம்பு பஸ்ட் லுக் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் மணிரத்தினம், கமலஹாசன். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடம் கழித்து இவர்கள் இருவரும் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப்.

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசனுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானம் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து விலகி விட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்புவும், நடிகர் அசோக் செல்வமும் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு படத்தில் நடித்த சில காட்சிகள் லீக்கானது. நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஒரு பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் இதுவரை அப்படத்தின் சூட்டிங் இன்னும் தொடங்காமலையே இருந்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்திருக்கின்றார். சிம்பு 48 படத்திற்காக நீண்ட மூடி வளர்த்திருந்தார்.

அந்த கெட்டபில் இப்படத்தில் நடித்திருக்கின்றார். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து நியூ தக் இந்தி டவுன் என புழுதி பறக்க நடிகர் சிம்பு காரில் வந்து இறங்கும் காட்சியை வெளியிட்டு சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே நடிகர் சிம்புவை வைத்து மணிரத்தினம் அவர்கள் செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. தற்போது சிம்புவை தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் கமலஹாசனுக்கு மகனாக இவர் நடிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருந்த அபிராமி தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக தான் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது . மேலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

1 hour ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

2 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

4 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

6 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

11 hours ago