Categories: CINEMA

16 வயதில் ஒரு கம்பெனி, எல்லாமே ஃபெயிலியர்.. எல்லாமே சொல்லி கொடுத்தது தனுஷ் தான்.. மனம் திறந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகை..

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷின் புதுப்பேட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பிள்ளை தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்து வருகின்றது.

கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ராயன், குபேரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக கலக்கி வரும் நடிகர் தனுஷ் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

தற்போது பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்கின்ற திரைப்படத்தை எஸ்எஸ் ஸ்டான்லி இயக்கியிருந்தார். மேலும் தனுஷ், அபர்ணா பிள்ளை, கர்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் இவருக்கு சுமாரான அளவுக்கு வெற்றியை கொடுத்தது. இப்படத்தில் ஷாலி என்கின்ற கதாபாத்திரத்தில் அபர்ணா பிள்ளை நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். இதை தொடர்ந்து ஏபிசிடி, நெஞ்சில் ஜில்ஜில், கண்ணுக்குள்ளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார்.

சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கிய பிறகு 2011 ஆம் ஆண்டு பரணி என்கின்ற டாக்டரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். அவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடித்திருந்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். நான் மிஸ் சென்னை ஆனபோது இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் ஆரம்பத்தில் தனக்கு படங்களில் நடிக்க விருப்பமில்லை. பின்னர் என்னை சமாதானம் செய்து படத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன். அதன் பிறகு பல திரைப்படங்களில் நான் கிளாமராக நடித்தேன். அதனை தொடர்ந்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் தனக்கு அப்படியே அமைந்தது. இயக்குனர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை.

இயக்குனர்கள் மக்களுக்கு என்ன தேவையோ அதனை தான் கொடுக்கிறார்கள். அது நமக்கு பிடித்திருந்தால் செய்யலாம் இல்லையென்றால் அடுத்த வேலையை பார்த்துவிட்டு போக வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கல்லறையின் மேல் உட்காருவது போல் ஒரு சீன் வரும், அன்று என்னுடைய பிறந்தநாள். மேலும் சிம்பு என்னுடைய பள்ளி நண்பன். மன்மதன் திரைப்படத்தில் அபர்ணா என்ற பெண்ணை கொன்றுவிடுவார்கள்.

அதை என்னை நினைத்து தான் எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எப்படி நடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் அந்த கேரக்டரை எப்படி உள்வாங்கிக் கொண்டு நடிக்க வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் லிஸ்ட் போட்டு எழுதி கொடுத்தது நடிகர் தனுஷ் தான். அந்த படத்தில் டாம் பாய் போன்று நடித்திருப்பேன். ஆனால் ரியல் லைஃப்லும் நான் ஒரு டாம் பாய் தான் என்று பல விஷயங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அட்ஜஸ்ட்மென்ட் OK சொன்னா சகல வசதி.. அம்மா கேரக்டருக்கு கூட அப்படி.. நடிகை மாலதி ஓபன் டாக்..!!

துணை நடிகையான மாலதி கன்னட திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.…

1 நிமிடம் ago

கமல்ஹாசனை ‘வெள்ளை செந்தில்’ எனக் கலாய்த்த கவுண்டமணி… அதைக் கேள்விப்பட்டு உலகநாயகனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே…

7 நிமிடங்கள் ago

ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்பு.. தலை தலையாக அடித்துக் கொண்டு கதறி அழுத பா ரஞ்சித்.. வைரலாகும் வீடியோ..!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த பா ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத…

31 நிமிடங்கள் ago

குணா படத்துல நிறைய குறைகள் இருக்கு… அதனால்தான் அந்த படம் ஓடல – பிரபல நடிகரிடம் ஓப்பனாக சொன்ன கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின்…

1 மணி நேரம் ago

ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள்… எல்லா வெர்ஷனிலுமே சூப்பர்ஹிட் பாடல்கள்- இந்த படத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…

2 மணி நேரங்கள் ago

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

11 மணி நேரங்கள் ago