ப்பா.. யாருடா அது… தனது முக தோற்றத்தை மாற்றிக் கொண்ட பிரபல நடிகை…இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam

Published on:

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அதுல்யா ரவி குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ் மற்றும் குறும்படம் போன்றவற்றில் நடித்து முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராக பிரபலமானவர். இவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், இயக்குனர் சமுத்திரக்கனி ‘ஏமாளி’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தார்.

   

இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் காதல் கண் கட்டுதே, நாடோடிகள் 2, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த ‘கடாவர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அவர் தனது முகத்தின் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.