அட சூப்பரா இருக்கே…பிரம்மாண்டமாய் புது வீட்டை கட்டும் அறந்தாங்கி நிஷா…முதன்முதலாக அவரே வெளியிட்ட வீடியோ இதோ…

By Begam

Published on:

அறந்தாங்கி நிஷா ஒரு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘சின்னத்திரை நயன்தாரா’ என தன்னை பாசிட்டிவாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார். தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

   

நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அறந்தாங்கி நிஷாவும் அவரது கணவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடு’ என  புகைப்படத்துடன் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியான வண்ணம் இருந்தது. இச்செய்தி உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அறந்தாங்கி நிஷா வீட்டின் வேலைகள் நடக்கும் இடத்தில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

author avatar