#image_title
விஜய் தொலைக்காட்சியில் 2013ல் வெளியான சூப்பர் ஹிட் சீரியல் ‘ஆபீஸ்’. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. கனா காணும் காலங்கள் தொடரின் தொடர்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த சீரியல் மூலம் பல்வேறு சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிளா.
இத்தொடருக்கு முன்பாகவே இவர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். இதை தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாய் பணியாற்றினார்.
ஆபீஸ் தொடருக்கு பின்னர் தாயுமானவன், அக்னி பறவை போன்ற சீரியலில் நடித்தார். இவரது சிறப்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலில் விஷால் நடித்த ‘பூஜை’ திரைப்படத்தில் விஷாலின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை, சிங்கம் போன்ற பல படங்களின் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட இவர் வெளிநாட்டில் செட்டிலானார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது..? என்று அதிர்ச்சியில் உள்ளனர்.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…