Categories: CINEMA

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. வெற்றி பெற்ற சில படங்களும் அவருக்கு பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை.

அதனால் திரையுலகில் தான் சந்தித்த மிக மோசமான அனுபவங்களை யுடியூப் சேனல்களில் புலம்பி தள்ளி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவரின் ஆவேசமான பேச்சும் உடல்மொழியும் அவர் வீடியோக்களை அதிக ரசிகர்கள் காண வைத்துள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் இயக்குனர் மணிரத்னத்தை கிழி கிழியென்று கிழித்துள்ளார். அதில் “மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை நான் விநியோகம் செய்தேன். அந்த படத்தால் எனக்கு 2002 ஆம் ஆண்டிலேயே 1.28 கோடி ரூபாய் நஷ்டம். அதனால் நான் மணிரத்னத்திடம் ஒரு உதவி கேட்டேன். ஆனால் அவர் என்னை சந்திக்கக் கூட இல்லை. உதவியாளரை விட்டு பேச வைத்தேன்.

#image_title

மணிரத்னத்தின் அண்ணன் ஜி வி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எடுத்த சில படங்கள் பெரிய தோல்விப் படமாக அமைந்தன. அவருக்கு 7 கோடி ரூபாய் அளவுக்குக் கடன்  ஏறிவிட்டது. கடன்காரர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அவர் என்னிடம் உதவி கேட்டார். நான் அவருக்காக சில பேரிடம் பேசினேன். ஆனால் உதவி கிடைப்பது தாமதமானது.

இதற்கிடையில் நான் அவர் தம்பி மணிரத்னத்திடம் பேசுகிறேன் என்று சொன்னேன். அவர் ஒரு படம் பண்ணிக் கொடுத்தால் ஜி வி தப்பித்துவிடலாம். ஆனால் என்னை ஜி வி தடுத்துவிட்டார். என்னிடம் “அவனெல்லாம் மனுஷனே இல்லை. அவனிடம் உதவி கேட்க வேண்டாம்” என சொல்லிவிட்டார். ஜி வி யின் தற்கொலைக்கு மணிரத்னமும் ஒரு காரணம். அவர் வேண்டுமானால் சில முறை உதவி செய்திருக்கலாம். ஆனால் அவரை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு இவர்கள் விடலாமா?. அது யார் பொறுப்பு? நான் மட்டும் அன்று ஊரில் இருந்திருந்தால் அவரை தற்கொலை செய்துகொள்ள விட்டிருக்க மாட்டேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

 

vinoth

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

2 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

3 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

3 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

9 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

9 மணி நேரங்கள் ago