ஆந்திராவை அதிரவிட்ட விஜயின் ‘லியோ’… பாலையா படத்தை எல்லாம் பஞ்சராக்கிய முதல் நாள் வசூல்…

By Begam

Published on:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம்,  தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்தத்தின் விளைவு தான் இந்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

   

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஆடியோ லான்ச் ரத்து, ரோகிணி தியேட்டர் இருக்கைகள் சேதம், கடைசி வரை தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கீட்டில் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது.

மேலும் இத்திரைப்படம் உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.  அதன்படி ஆந்திராவில் லியோ முதல் நாள் வசூலாக 16 கோடியை எட்டியுள்ளது. இதுவே இதுவரையிலான தெலுங்கு சினிமாவின் முதல் நாள் அதிக வசூலாகும்.  இதன்மூலம் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலையா படங்களின் வசூலையே பஞ்சராக்கியுள்ளது தளபதியின் ‘லியோ’. இதோ அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு…