Categories: சினிமா

5 வருட நட்பு, காதலாக மாறியது எப்படி..? சூர்யா மீது காதல்வயப்பட்டது குறித்து மனம் திறந்த நடிகை ஜோதிகா..

Spread the love

நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தின் நாயகன் சூர்யா தான். ஒரு கட்டத்தில் ஜோதிகாவுக்கு, வாழ்க்கையிலும் சூர்யா நிஜ நாயகன் ஆனார். ஜோதிகாவும் நாயகி ஆனார். இருவரது வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கோவை கொடிசியா மஹாலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது. சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகளாக இருந்த சூர்யா குடும்பம், இப்போது மும்பையில் செட்டில் ஆகி விட்டது. இந்தி, ஆங்கில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் சூர்யா. ஜோதிகாவும் காதல் தி கோர் போன்ற மிக வித்யாசமான படங்களில், கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல விஷயங்களை மனம் திறந்து ஜோதிகா பேசினார்.

அந்த நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியதாவது, முதலில் காதலை சொன்னது யார் என எனக்கு ஞாபகமே இல்லை. எங்களது 5 ஆண்டுகால நட்பு எப்போது காதலாக மாறியது என்பது எனக்கு புரியவே இல்லை. இப்பக்கூட என் பொண்ணு அடிக்கடி கேட்பாங்க. யார் முதலில் காதலை சொன்னதுன்னு. அது நிஜமாகவே ஞாபகம் வரலே. நாங்க நட்பே இருந்ததே ஒருகட்டத்துல ஸ்ட்ராங்கா அது மாறிடுச்சு. ரெண்டு பேருமே வெற்றியை நோக்கிதான் போனோம். அதை சந்தோஷமா இருவரும் பகிர்ந்துகிட்டோம். அப்போ நிறைய தடைகள் இருந்தது. அதை எல்லாம் தாண்டி, உடைச்சுதான் ஜெயிச்சோம். அதுல யார், யாருக்கு ப்ரப்போஸ் பண்ணினோமுங்கறது தெரியலை. உண்மையாக ஞாபகம் வரலை.

12 பி படத்துல நடிச்ச டைம்ல, அவர்மீது எனக்கு நிறைய ஆர்வம், கவனம் இருக்குதுன்னு நான் புரி்ஞ்சுக்கிட்டேன்னு நினைக்கறேன். சூர்யா, 12 பி படத்தை தியேட்டர்ல போய் பார்த்தாங்க. நான் நந்தா படத்தை தியேட்டர்ல போய் பார்த்தேன். அப்ப ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை, பாராட்டறதுன்னு இருந்தோம். அப்போ தியேட்டர்ல போய் இருந்துட்டு, சூர்யாவுக்கு பெரிய படம் ஒன்றை பார்க்க போறேன்னு சூர்யாவுக்கு நான் மெசேஜ் செஞ்சேன். அந்த காலகட்டம்தான் நாங்க காதலர்களாக மாறியதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

admin

Recent Posts

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

12 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

12 minutes ago

ஐயோ பாவம்… கல்லூரிப் பேருந்து மோதி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 3 மாணவிகள் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…

22 minutes ago

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

33 minutes ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

58 minutes ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

1 மணத்தியாலம் ago