பிக்பாஸ்  கதிரவனின் வருங்கால மனைவி இவர்தானா?… கட்டியணைத்து கண்கலங்கிய அழகான தருணம்…. எமோஷனல் ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பிரம்மாண்டமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 6ல் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

   

80 நாட்களைக் கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இனிவரும் நாட்கள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போட்டியாளர்களும் டைட்டிலை வெல்ல சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வார டாஸ்காக பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்றைய நாளின் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதில் கதிரவனை பார்க்க இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அதில் ஒருத்தர் கதிரவனின் காதலி போல் தெரிகின்றது. அவரைப் பார்த்ததும் உடனே கண்கலங்கி அழுகின்றார். அதன் பிறகு அவருக்கு சிறிய கிப்ட் ஒன்று கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சிரித்து பேசிட்டு மூவருமாக டான்ஸ் ஆடுகின்றார்கள். இவ்வாறு இன்றைய நாளின் முதல் பிரமோ முடிவடைந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….