‘குக் வித் கோமாளி’ கனியின் தங்கை ஒரு பிரபல நடிகையா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

‘குக் வித் கோமாளி’ கனியின் தங்கை ஒரு பிரபல நடிகையா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில், தற்பொழுது 2,3 என கடந்து 4 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகள் செய்யும் செயல்கள் அனைத்தும் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் மதுரை முத்து என மக்களிடையே நன்கு பிரபலமானவர்கள் சிலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்று கலக்கினர்.

இதில் மக்களுக்கு பெருமளவில் பரிச்சயமில்லாத போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. ஆனால் தனது திறமையால் குக் வித் கோமாளி டைட்டிலையே வென்றார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவரை காரக்குழம்பு கனி என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.  இவரது உண்மையான பெயர் கார்த்திகா. இவரது தந்தை இயக்குனர் அகத்தியன். இவரது ஒரு சகோதரி நடிகையும், பிரபல பிக்பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி.

மற்றொரு சகோதரி நிரஞ்சனி. இவர் காஸ்டியூம் டிசைனர். மற்றும் துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் இணைந்து நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கனி மக்கள் தொலைக்காட்சியில் ‘சொல் விளையாடு’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கனி. இவர் தற்பொழுது தனது சகோதரி நிரஞ்சனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இவர்களின் புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam