Categories: CINEMA

முதல் மரியாதை படம் ஓடாதுய்யா என பாரதிராஜாவிடம் சொன்ன இளையராஜா.. ஆனாலும் அவரே நிகழ்த்திய மேஜிக்..

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.

அந்த படத்தில் இருந்த வயதான ஆணுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலான அன்பை களங்கமில்லாமல் சொல்லியிருந்தார். அந்த படத்தில் மலைச்சாமி என்ற கதாபாத்திரத்துக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். அதுவரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என சொன்னவர்களுக்கு பதிலளிப்பது போல இருந்தது அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் பின்னணி இசைக்கோர்ப்புக்காக தனது நண்பரும் ஆஸ்தான இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு போட்டுக்காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த இளையராஜாவுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதைப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பாரதிராஜாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

பாரதிராஜாவிடம் “இந்த படம் ஓடாது. அதனால் இந்த படத்துக்கு எனக்கு சம்பளம் வேண்டாம்.” என சொல்லியுள்ளார். இளையராஜா இப்படி சொல்லிவிட்டாரே என்ற தயக்கத்தில் இருந்துள்ளார். ஆனாலும் தனக்கு பிடிக்காத படத்துக்கும் மிகச்சிறப்பான பின்னணி இசையை அமைத்துக்கொடுத்துள்ளார். படம் ரிலீஸான போது இளையராஜாவின் கருத்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

அதன் பின்னர் இளையராஜா படம்தான் ஓடிவிட்டதே இப்போது என் சம்பளத்தைக் கொடு எனக் கேட்டுள்ளார். ஆனால் பாரதிராஜாவோ சம்பளமெல்லாம் தரமுடியாது என ஜாலியாக மறுத்துவிட்டாராம்.

vinoth

Recent Posts

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

5 நிமிடங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

24 நிமிடங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

32 நிமிடங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

1 மணி நேரம் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

2 மணி நேரங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

3 மணி நேரங்கள் ago