நடிகை ரம்பாவின் சகோதரரை பார்த்திருக்கீங்களா?… இவர் ஒரு பிரபல தயாரிப்பாளரா?… வைரலாகும் புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகை ரம்பா முதன்முறையாக தன சகோதரருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

90’s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான ‘ஆ ஒக்கடு அடக்கு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்திருந்தார். இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதே பிரபலத்துடன் தான் காணப்படுகிறார்.

   

நடிகை ரம்பா ‘சுந்தர புருஷன்’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் நடித்த ”உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து அவர் செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களிள் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து திரையுலகில் இருந்து விலகிய இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்பொழுது நடிகர் ரம்பா தன் சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரம்பாவுக்கு வாசு என்கிற சகோதரர் இருக்கிறார். ரம்பா 2003ல் சகோதரர் வாசு உடன் சேர்ந்து ‘த்ரீ ரோசஸ்’ என்கிற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் ரம்பா மிகப்பெரிய கடனாளி ஆனார். அதை சொத்துக்களை விற்று தான் ரம்பா அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரம்பாவின் குடும்பத்தினரை பார்த்த சகோதரர் வாசு அவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் ரம்பாவின் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ரம்பா.

இதோ அந்த புகைப்படங்கள்…