Categories: CINEMA

விஜய் தவறவிட்ட 5 வெற்றிப் படங்கள்.. அப்போ, துரைசிங்கமா கலக்க வேண்டியது நம்ம தளபதி தானா..!

1992 காலகட்டத்தில் தன் சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 2024 வரை தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மக்கள் மனதில் வெற்றிக்கொடியை என்றென்றும் நட்டு வைத்திருக்கும் “தளபதி விஜய்” அவர்கள் தவறவிட்ட ஐந்து படங்களை தான் சற்று பார்க்க போகிறோம். 1992 இல் இவர் முதல் முறையாக நடித்த “நாளைய தீர்ப்பு” படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இருந்தார்.

ஆனால் அவர் அப்படம் மூலம் அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்று மனதளவில் உருகி இருந்தார், இப்படத்தை பார்த்த “பலரும் இதெல்லாம் ஒரு மூஞ்ச தகர டப்பா மூஞ்சி” அப்படின்னு கேலி செய்த பலரும் உண்டு, ஆனால் இவர் துவண்டு போகாமல் இப்ப வரை சாதித்துக் கொண்டிருக்கிறார், இந்திய சினிமாவில் தனக்கென்று கோடி கணக்கில் ரசிகர்களை தன் இதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார், ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பார்ந்த ரசிகர்களே” என்ற அர்த்தமாகும். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார், பல பிரம்மாண்டமான கதைகளை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்க்காமல் இவருக்கு கையை விட்டு நழுவிய படங்கள் சில உண்டு. ஒரு சில படம் கதை செட்டாகாமல் அல்லது இவரின் ஜானரில் தாண்டி அமைந்த கதையாக இருந்து, பல கதைகளை இவர் தவற விட்டீர், அதில் சிலவாறு சற்று பார்ப்போம்.

1999 இல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த “முதல்வன்” படம் முதலில் விஜய் அவர்களுக்காகத்தான் உருவாக்கப்பட்ட கதை, இப்படத்தில் அரசியல் அமைப்பு அதிகமாக இருப்பதால் விஜய் அவர்களுக்கு அப்பொழுது அது செட் ஆகாது என்று தவிர்த்து விட்டார்.

2001 ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பது வெளிவந்த படம் தான் “தீனா”. இப்பட முதலில் விஜய் அவர்களிடம் தான் கதையை சொல்லப்பட்டது, ஆனால் விஜய் அவர்கள் படத்தில் கதை தனக்கு செட் ஆகுமா என்று யோசித்துப் பார்த்தார், பின்னர் வேண்டாம் என்று சொல்லி கைமிறி அஜித் அவர்களுக்கு சென்று இப்படம் பெரிய வெற்றி அடைந்து, அஜித் அவர்கள் “தல” என்று செல்லமாக அழைக்கப்பட்ட பட்டப்பெயர் இப்படம் மூலம் தான் அவருக்கு கிடைத்தது.

2003 ஆம் ஆண்டு விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளியாகி கோட்டை எங்கும் கொடிகட்டி பறந்த படம் தான் “தூள்”. படம் கமர்சியல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இக்கதையில் பெரிதாக எதுவும் இல்லை என்று விஜய் அவர்கள் கைவிட்டு இருக்கிறார், ஆனால் விக்ரம் அவர்கள் நடித்து படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

2005 ஆம் ஆண்டு லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் விஷால் நடிப்பு தென் மாவட்டங்களில் தரை அதிர ஓடிய படம் தான் “சண்டக்கோழி” மதுரை, கம்பம், போடி, சின்னமனூர் போன்ற பல இடங்களில் கதை கலன்களை அமைத்து இப்படத்தை இயக்கி தென் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டி இப்படம் அவரும் வெற்றி அடைந்தது. முதலில் விஜய் அவர்களுக்கு தான் வந்தது, இபபடம் விஜய் அவர்கள் கைவிட விஷால் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்.

2007 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை சூர்யா அவர்களுக்கு வெற்றி நடையாக போட்ட படம் தான் “சிங்கம்”. சூர்யா என்றாலே சிங்கம் என்ற அடைமொழிக்கு ஆகும் அளவிற்கு சூர்யா அவர்களுக்கு படம் மாபெரும் பேரை வாங்கி கொடுத்தது, இப்படத்தை முதலில் ஹரி அவர்கள் விஜயிடம் தான் வந்து கதையை சொல்லி உள்ளார், ஆனால் தனக்கு காவல்துறை கதாபாத்திரம் செட் ஆகுமா என்று சந்தேகத்தில் இந்த கதையை வேண்டாம் என்று சொன்ன பொழுது சூர்யாவுக்கு இக்கதை சொல்லப்பட்டு இயக்கி தற்போது சூர்யா சிங்கம் 3 வரை பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பி அவர்களுக்கு பெரும் பேரை வாங்கித் தந்தது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

28 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago