இயக்குனர் ஸ்ரீதர் தனது வீட்டின் பெயரை வைத்தே சித்ராலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் சி.வி ராஜேந்திரனின் நண்பர்களான கோபு, வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோர் ஒர்க்கிங் பார்ட்னர்களாக நியமிக்கப்பட்டனர். சித்ராலயா நிறுவனத்தின் மூலம் முதன் முதலாக தயாரித்த படம் தேன்நிலவு.
இந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும், ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த வைஜெயந்திமாலா கதாநாயகியாகவும் நடித்தனர். இந்த படத்தில் எம்.என் நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, பி.ஏ.வசந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.எம் ராஜா இசை அமைத்திருந்தார். இயக்குனர் ஸ்ரீதர் சுமார் 2 மாதங்கள் தேன்நிலவு படத்தை காஷ்மீரில் வைத்து எடுத்தார்.
நடிகர் நடிகைகள் குடும்பத்துடன் அங்கு வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. சுமார் 52 நாட்களில் ஸ்ரீதர் படத்தை எடுத்து முடித்து விட்டார். காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் தேன்நிலவு தான். இந்த படத்தில் இடம்பெற்ற ஓஹோ எந்தன், பேபி பாட்டு பாடவா, நிலவும் மலரும், சின்ன சின்ன கண்ணிலே, மலரே மலரே தெரியாதா, காலையும் நீயே, ஊரெங்கும் தேடினேன் என்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…