Categories: CINEMA

1981 முதல் 2004 வரை நேரடியாக மோதிய கமல் – விஜயகாந்தின் 22 படங்கள் – இதில் அதிக வெற்றிகளை பெற்றது யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜயகாந்த் 1980, 90களில் இருவரும் மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்தனர். பல படங்கள் அவர்கள் நடிப்பில் வெளிவந்தன. குறிப்பாக பொங்கல், தீபாவளி காலகட்டங்களில் இவர்களது படங்கள் நேரடியாக மோதின. இதில் எந்தெந்த படங்கள் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் அதிக படங்களில் வெற்றி பெற்ற நடிகர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 1981ல் வெளிவந்த கமல் நடித்த சங்கர்லால், விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி ஆகிய படங்களில் 100 நாட்கள் ஓடி சிவப்புமல்லி வெற்றி பெற்றது.

#image_title

அடுத்து மூன்றாம்பிறை, பார்வையின் மறுபக்கம் ஆகிய படங்கள் வெளியானது, இதில் கமல் நடித்த மூன்றாம் பிறை படம் வெற்றி பெற்றது. அடுத்த எனக்குள் ஒருவன், வைதேகி காத்திருந்தாள் படங்கள் வெளியான நிலையில், 200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் வெற்றி பெற்றது. ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை, புன்னகை மன்னன், காதல் பரிசு, நாயகன், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன் என கமல் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், அந்த படங்களுக்கு போட்டியாக வெளியான விஜயகாந்த் நடித்த படங்கள்

அலை ஓசை, ராமன் ஸ்ரீராமன், ஏமாறாதே ஏமாற்றாதே, தழுவாத கைகள், சிறைப்பறவை, தர்மம் வெல்லும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், காவியத்தலைவன் போன்ற விஜயகாந்த் படங்கள் தோல்வியடைந்தன. இந்த காலகட்டத்தில் தர்மதேவதை, உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, நல்லவன், தம்பி தங்க கம்பி, ராஜ நடை, சத்ரியன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றி படங்களை மட்டுமே விஜயகாந்த் கொடுத்தார்.

#image_title

சேதுபதி ஐபிஎஸ், மகாநதி இரண்டு படங்களுமே கமல், விஜயகாந்துக்கு வெற்றி படங்களாக இருந்தன. 1994ல் வெளியான நம்மவர், பெரிய மருது இரண்டு சுமாரான படங்களாக அமைந்தன. சதிலீலாவதி, அவ்வை சண்முகி மற்றும் 2004ல் வெளியான விருமாண்டி ஆகிய கமல் படங்கள் வெற்றி பெற்றன. விஜயகாந்த் நடித்த தவசி, சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா போன்ற படங்களும் வெற்றிப்படங்களாக இருந்தன. கமல், விஜயகாந்த் 1981 முதல் 2004 வரை மொத்தம் 24 ஆண்டுகளில் அவர்கள் நடித்த 22 படங்கள் நேருக்கு நேர் போட்டியிட்டுள்ளன.

#image_title

இதில் அதிக படங்களில் வெற்றி பெற்றது நடிகர் கமல்ஹாசன்தான். எனினும் இதில் விஜயகாந்த் சினிமா பயணத்தில் வைதேகி காத்திருந்தாள், உழவன் மகன், நல்லவன், சத்ரியன், சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம் போன்ற பல முக்கிய வெற்றி படங்களும் அடங்கியிருக்கின்றன. அதுபோல் கமலின் பெயர் சொல்லிய மூன்றாம் பிறை, காக்கி சட்டை, புன்னகை மன்னன், நாயகன்,. மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன், மகாநதி, அவ்வை சண்முகி, அன்பே சிவம், விருமாண்டி முக்கிய படங்களும் இருக்கின்றன.

Sumathi
Sumathi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

5 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

5 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

6 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

12 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

12 மணி நேரங்கள் ago