‘ரொம்ப நடிக்காதீங்க’!… கதிரவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனலட்சுமி!…  வெளியான முதல் ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஸினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

தொடர்ந்து மீதமுள்ள 10 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார தலைவராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்ரமன், ரக்ஷிதா, அசின், சிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரம் பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும், ஆசிரியராகவும் பிரிந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டின் 73 வது நாளுக்கான முதல் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் தனலட்சுமியிடம் ‘தப்பை உணர வேண்டும்’ என்று கதிரவன் கூறுகிறார். அதற்கு தனலட்சுமி நான் தப்பு பண்ணாத உணர முடியும் என்று கூறி மாறி வாக்குவாதம் நடைபெற கதிரவனை பார்த்து ‘ரொம்ப நடிக்காதீங்க’ என்று தனலட்சுமி கூறினார். இதற்கு கதிரவன் கடுப்பாகும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…