CINEMA
காதல் பட நடிகர் இப்ப என்ன செய்றாருன்னு தெரியுமா?…!!! நடிகர் கொடுத்த பேட்டி..!! திடுக்கிடும் தகவல்கள்..!!! உள்ளே..!!
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காதல்’.இந்த படத்தில் இயக்குனர் காதலுக்கு சாதி மதம் கிடையாது என்பதை மிக அழகாக கூறியிருப்பார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அது வசூலினை வாரி குவித்தது.
இந்த படம் வெளியான போது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் பரத், சந்தியா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்க்கும் சிறுவன் தான் அருண்.
இவரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அருண் சிறப்பான நடிப்பினை இப்டத்தில் வெளிப்படுத்தி இருப்பார். இவர் அடுத்ததாக சிவகாசி படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கியவர்.
வளர ஆரம்பித்ததும் பட வாய்ப்புகள் வரவில்லை. சினிமா துறையில் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. தற்பொழுது அவர் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியானது.
சினிமா துறையை விட்டு விலகிய இவர் தற்பொழுது மர வேலைகள் செய்யும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். தற்சமயம் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ‘நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன். என்னுடைய பள்ளி படிப்பு காலத்தில் எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம். அதன் காரணமாக நாடகங்களில் அதிகம் நடிப்பேன்.
அப்பொழுதுதான் காதல் பட வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன் மூலம் நான் மக்களிடம் மிகப் பிரபலம் அடைந்தேன். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். பின்னர் வளர தொடங்கியதும் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
வீட்டின் சூழ்நிலை ,குடும்ப கஷ்டம் காரணமாக நான் சினிமா துறையை விட்டு விலகி விட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த நான், தற்பொழுது ஆர்டர் எடுத்து மரவேலைகளை செய்து வருகிறேன். இதுவரை நான் எந்த பேட்டியும் கொடுத்ததில்லை.
சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த பேட்டியின் மூலம் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.