சித்தார்த்துக்கு மட்டுமல்ல அதிதிக்கு இது இரண்டாவது திருமணம்… அதிதியின் முதல் கணவர் யார் தெரியுமா ? வெளிவராத உண்மைகள்

By Deepika

Published on:

நடிகர் சித்தார்த், காற்று வெளியிடை பட நாயகி அதிதி ராவை தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் எளிதே நடைபெற்றது. திருமண புகைப்படங்களை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருக்க, இருவரும் தங்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை காட்டியபடி போட்டோ வெளியிட்டுள்ளனர்.

Siddharth and Meghna

இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சித்தார்த்துக்கு இது இரண்டாவது திருமணம். ஆம், 2003 ஆம் ஆண்டு தன்னுடைய சிறு வயது தோழி மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் சித்தார்த்.

   
Aditi and Satyadeep mishra

இந்தநிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய 44 ஆவது வயதில் அதிதி ராவை காதலித்து கரம் பிடித்துள்ளார். அதேபோல் அதிதி ராவுக்கும் இது இரண்டாவது திருமணமாம். ஆம், 2012 -ம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 17 வயதில் சத்யதீப்பை அதிதி சந்தித்துள்ளார் அப்போதே அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. 26 வயதில் அவரை கரம் பிடித்த அதிதி, திருமணத்தை ரகசியமாகவே வைத்துள்ளார்.

Aditi and Siddharth

நடிகையாக வேண்டும் என்பதால் திருமணம் குறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார் அதிதி, ஆனால் ஒரே வருடத்தில் தன் காதல் கணவரை பிரிந்தார் அதிதி ராவ். அதிதி முதல் கணவர் ஒரு நடிகர் அதுமட்டுமல்ல அவர் ஒரு வக்கீலும் கூட. இந்தநிலையில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்துள்ளார் அதிதி.

author avatar
Deepika