பிரபல ஜோடி ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டில் விசேஷம்… அவர்களே வெளியிட்ட வீடியோ… என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு?…

பிரபல ஜோடி ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டில் விசேஷம்… அவர்களே வெளியிட்ட வீடியோ… என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு?…

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. திருமணத்தைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர்கள் தற்பொழுது தங்களது கெரியரில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல இவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும்,

புகைப்படங்களாகவும்,  வீடியோக்களாகவும் இணையத்தில் பதிவு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான மகாலட்சுமி காசுக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பலவாறு விமர்சனம் செய்யப்பட்டார். ஆனால் தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்வை மகிழ்ச்சியாக எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை படங்களை மட்டும் தயாரித்து கொண்டிருந்த ரவீந்தர் தற்பொழுது சீரியலையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் எப்பொழுதும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது தங்களது வீட்டில் சண்டி ஹோமத்தை நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர்.

இந்த ஹோமத்தின் காட்சிகளையும், இதில் மகாலட்சுமி கலந்து கொண்டதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஹோமத்தின் மூலம் தங்கள் மீது அதிகமாக நம்பிக்கை மற்றும் அன்பு வைத்துள்ளவர்களுக்காக தான் இந்த ஹோமத்தை நடத்துவதாகவும், அவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Begam