Categories: CINEMA

அரசு மரியாதையுடன் நாளை மாலை கேப்டன் விஜயகாந்தின் உடல் அடக்கம்.. எந்த இடத்தில் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.ன் அவர் சமீபத்தில் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின் பூரண குணமடைந்து விடு திரும்பினார். பிறகு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். சினிமாவில் நடிகர் சங்க தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் ஏராளம் .அதேபோல அரசியலிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் தலைவராகவும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக அவர்களின் உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக நடிகர் விஜயகாந்தின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்கிற கேள்வி தற்பொழுது  தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில்  எழுந்துள்ளது.  விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் அவர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும்,

ஆனால் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நாளை மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்களும் தொண்டர்களும் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

7 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

8 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

9 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

9 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

9 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

11 hours ago