மறைந்த காமெடி நடிகர் போண்டா மணிக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா..! புகைப்படங்கள் உள்ளே..

By Archana on ஏப்ரல் 5, 2021

Spread the love

உலகிலேயே தமிழ் சினிமாவில்தான் சொந்தப் பெயரோடு அடைமொழி சேர்த்துக் கொள்ளும் வழக்கம் அதிகம். தாங்கள் நடித்த முதல் படத்தின் பெயரையோ அல்லது தாங்கள் நடித்த பிரபலமான கேரக்டரின் பெயரையோ பெயருக்கு முன்பாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஆரம்பத்திலிருந்தே உண்டு. உணவுப் பொருட்களை அடைமொழியாக வைத்துக் கொள்ளும் விசித்திரமான பழக்கமும் நமக்குண்டு.

   

தேங்காய்’ சீனிவாசன், ‘பக்கோடா’ காதர், ‘இடிச்சபுளி’ செல்வராஜ், ‘தயிர்வடை’ தேசிகன், ‘ஓமக்குச்சி’ நரசிம்மன், ‘சேமியா’ மணி, ‘கடுகு’ ராமமூர்த்தி, ‘அல்வா’ வாசு, ‘பரோட்டா’ சூரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று நிறைய பெயர்கள். இந்த வரிசையில் ‘போண்டா’ மணிக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.திரைப்படங்களில் நம்மை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் போண்டா மணியின் சொந்த வாழ்க்கை சோ.கங்கள் நிரம்பியது.

   

 

“2003ல் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஹெல்ப் பண்ணி என்னோட கல்யாணம் நடந்துச்சி. காஸ்ட்யூமர் சலபதியோட பொண்ணு மாதவிதான் என்னோட ஒய்ஃப். சாய்குமாரின்னு ஒரு பொண்ணு, சாய்ராமுன்னு ஒரு பையன். சந்தோஷமா குடும்ப வாழ்க்கை போயிக்கிட்டிருக்கு. இப்போதான் சென்னையில் ஒரு மனை வாங்கியிருக்கேன். வீடு கட்டணும்.

இத்தனை வருஷமா சினிமாவில் நடிச்சி எனக்கு கார் கூட கிடையாது. அந்தளவுக்கு சம்பாதிக்கலை. ரொம்ப சாதாரணமான வாழ்க்கைதான். ஆனா, முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்னாலே கற்பனைகூட பண்ண முடியாத வாழ்க்கை. என்று கூறி இருந்தார் போண்டா மணி அவர்கள். கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் பதித்து சிகிச்சை பெற்றுவந்த போண்டாமணி அவர்கள் இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலே மரணமடைந்தார். இவருடைய மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருடைய மனைவியின் பெயர் மாலதி. நடிகர் போண்டாமணிக்கு மகள் ஒருவர் உள்ளார் அவர் கல்லூரி படித்து வருகிறார், ஒரு மகன் உள்ளார் அவர் வேலை செய்து வருகிறாராம்.

#bonda mani family

#bonda mani family

author avatar
Archana