‘அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே’… பிக் பாஸ் ஜனனியின் மணக்கோல புகைப்படங்கள்… உருகும் ரசிகர்கள்…

‘அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே’… பிக் பாஸ் ஜனனியின் மணக்கோல புகைப்படங்கள்… உருகும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது சமீபத்தில் வெற்றிகரகமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்ட 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்தார் ஜனனி. இவர் களமிறங்கிய முதல் நாளிலேயே இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஜனனி ஆர்மி தொடங்கப்பட்டது. இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி திரிஷா என்றும் அழைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று டைட்டிலே வெல்வார் என்று ரசிகர்கள் பலராலும்  எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பிக் பாஸ் வீட்டில் தனது செயல்களால் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியின் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது எவிக்ஷன் அவரது ரசிகர்களை மிகவும் கவலை அடைய செய்தது.

இந்நிலையில் பிக் பாஸ் விட்டு வெளியேற்றப்பட்ட ஜனனி இலங்கைக்கு செல்லாமல் தற்பொழுதும் இந்தியாவில் தங்கி உள்ளார். இவர் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மணமகள் கோலத்தில் இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தன்னிலை மறந்து ரசித்து வருகின்றனர்.

Begam