Categories: CINEMA

விஸ்வாசத்தை சந்தேகப்பட்ட பாரதிராஜா… சபதமெடுத்து அதை வென்று காட்டிய பாக்கியராஜ்!

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஆரம்பகால திரைப்படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்றவை தமிழ் சினிமா ரசிகனை பிரம்மிக்க வைத்தன. அதுவரை அவர்கள் பார்த்து வந்து நாடக  மேடைத்தனமான சினிமாக்களில் இருந்து அவர்களை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றன அந்த திரைப்படங்கள்.

அவரின் இந்த ஆரம்பகால படங்களில் எல்லாம் அவரது கூடவே இருந்த உதவி இயக்குனரான பாக்கியராஜுக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்குண்டு. பாரதிராஜாவின் படங்களின் வசனங்கள் மூலமாக மெருகேற்றியவர் பாக்கியராஜ். இவரின் திறமையைக் கணித்த தயாரிப்பாளர்கள் அவர் இயக்கத்தில் படம் தயாரிக்க ஆர்வமாக இருந்தனர்.

அதில் ஒருவர்தான் பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களை தயாரித்த எஸ் ஏ ராஜ்கண்ணு. அப்போது சிவப்பு ரோஜாக்கள் திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதை முடித்துவிட்டு தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தார் பாக்யராஜ்.

அந்த நேரத்தில் பாரதிராஜாவுக்கும் எஸ் ஏ ராஜ்கண்ணுவுக்கும் இடையில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் ரீமேக் உரிமையில் பாரதிராஜாவுக்கு பங்கு தருவதில் சிக்கல் எழுந்துள்ளது. அப்போது பாக்யராஜ் தயாரிப்பாளர் பக்கம் சேர்ந்துகொண்டு செயல்படுவதாக பாரதிராஜா சந்தேகப்பட்டுள்ளார். அதனால் அவரை அழைத்துக் கடுமையாக திட்டியுள்ளார். “நீ உன் முதல் படத்தை ராஜ்கண்ணு தயாரிக்க வேண்டுமென்று எனக்கு துரோகம் செய்கிறாய்” எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யராஜ் “என் முதல் படத்தை ராஜ்கண்ணு தயாரிக்க மாட்டார்” என சபதம் செய்துவிட்டு போயிருக்கிறார். சொன்னது போலவே அவரின் முதல் படத்தை ராஜ்கண்ணு தயாரிக்க வில்லை. அதன் பின்னர் பல படங்கள் இயக்கிய போதும்கூட ராஜ்கண்ணுவோடு அவர் இணையவில்லை.

ஒருநாள் பாரதிராஜாவே அழைத்து “இப்போது ராஜ்கண்ணு நஷ்டத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் பண்ணி கொடு” என சொன்னபிறகுதான் அவரோடு இணைந்து ’எங்க சின்ன ராசா’ படத்தை அவருக்கு இயக்கிக் கொடுத்துள்ளார் பாக்யராஜ்.

vinoth

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

3 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

5 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

6 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago