தமிழ் சினிமாவில் திருநங்கை வேடத்தில் நடித்து அசத்திய சூப்பர் ஹிட் ஹீரோக்கள்… அடடே இவருமா?… வீடியோ உள்ளே…

தமிழ் சினிமாவில் திருநங்கை வேடத்தில் நடித்து அசத்திய சூப்பர் ஹிட் ஹீரோக்கள்… அடடே இவருமா?… வீடியோ உள்ளே…

தமிழ் திரை உலகில் பல பிரபலம் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம், ராகவா லாரன்ஸ், விவேக் என இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்பொழுது இவர்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பை இங்கு நாம் பார்க்கலாம்.

தமிழ் திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர் காதலன் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

அடுத்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் இவர் ‘அப்பு’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பூலோகம், டிக் டிக், எங்கேயும் எப்போதும் என பல திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் ‘ஆதி பகவான்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அடுத்ததாக பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், ஹீரோ, குணசேத்திர கதாபாத்திரம் என அனைத்திலும் தற்பொழுது களமிறங்கி கலக்கி வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி ‘டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கை காப்பாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர்களை தொடர்ந்து விக்ரம், ராகவா லாரன்ஸ், விவேக் என பல முன்னணி நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதோ அவர்களைப் பற்றி நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஒரு வீடியோ…

Begam