CINEMA
வெளிநாட்டில் தனது மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய சஞ்சீவ் – ஆல்யா மானசா தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.
அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.
மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.
இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள்.
அவ்வகையில் தற்போது இருவரும் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தற்போது அதற்கெல்லாம் விடுமுறை எடுத்து விட்டு விடுமுறை கொண்டாட்டம் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.
அங்கு தனது மகனின் முதல் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram