பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது.. 80’ஸ் லுக்கில் சும்மா சூப்பரா இருக்காங்களே… இதோ பாருங்க…

By Begam

Updated on:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர்.

   

இவர்தன் அழகால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜான்விகபூர். இவர் ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தனது அம்மாவின் மறைவுக்கு பின்னர் திரையுலகில் கால் பதித்த இவர் அம்மா விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் செர்ரி திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே தெரிவித்திருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற செய்து வருகிறார்.

தற்பொழுது இவர் 80’ஸ் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது.. 80’ஸ் லுக்கில் சும்மா சூப்பரா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.