நடிகர் விஜய் ஆண்டனியின் மகனை பாத்திருப்போம்… மகளைப் பாத்துருக்கீங்களா?… எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காங்க…

By Begam

Published on:

திரையுலகில் இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது.

   

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவர் நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி, சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் மீரா விஜய் ஆண்டனி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தன்னுடைய மகளின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது நடிகர் விஜய் ஆண்டனி மகளின்  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவருடைய புகைப்படம்..