Categories: CINEMA

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் குஷி படத்தை இயக்கினார்.

அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. ஹிந்தியில் எடுக்கப்பட்ட குஷி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அன்பே ஆருயிரே, வியாபாரி, கள்வனின் காதலி, நண்பன், இசை, ஸ்பைடர், இறைவி, உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.

ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தனது மிரட்டாலான நடிப்பை வெளிப்படுத்தினார். மார்க் ஆண்டனி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் எஸ்.ஜே சூர்யாவின் மார்க்கெட்டை அடுத்த படிக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் எஸ்.ஜே சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, கேம் சேஞ்சர் படத்தில் நான் நடித்தேன். அதில் ஒரு சீனை சங்கர் சார் பார்த்துள்ளார். அதிலிருந்து எனது நடிப்பு அவருக்கு பிடித்து போய்விட்டது. அதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

12 நிமிடங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

55 நிமிடங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

1 மணி நேரம் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

15 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

16 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

16 மணி நேரங்கள் ago