Categories: CINEMA

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது படிப்படியாக முன்னேறி டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வருகின்றார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார் .

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் அதன் பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் இவர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றார். நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். கனா என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகின்றார்.

அது மட்டும் இல்லாமல் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் பேக்டரி தயாரித்து இருக்கின்றது. இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று தொடர்ந்து கேள்வி எழும்பி வந்தது. ஏனென்றால் அடுத்ததாக வெங்கட் பிரபு, சுதா கொங்குரா, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட மூன்று இயக்குனர்கள் கதை கூறியுள்ள நிலையில் இவர்களின் யாருடைய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் தான் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றாராம். மேலும் எஸ் ஜே சூர்யாவும் இந்த திரைப்படத்தை இணைந்து இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது இப்படத்தின் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு பாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

15 நிமிடங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

58 நிமிடங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

1 மணி நேரம் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

15 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

16 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

16 மணி நேரங்கள் ago