
CINEMA
ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் நடிகர் ரோபோ சங்கர்… ‘இதுக்கு மேல ஒல்லியானீங்கனா பாக்க முடியாது’… கதறும் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார்.
இவரது மூத்த மகள் இந்திரஜா. இவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்திராஜா. இத்திரைப்படத்தில் இவரது ‘பாண்டியம்மா’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
நடிகர் ரோபோ ஷங்கர் ஏற்கனவே தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது படு ஒல்லியாக மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மனைவி அவர் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இதுக்கு மேல ஒல்லியானீங்கனா பாக்க முடியாது’ என்று கதறி கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் வைரல் வீடியோ….
View this post on Instagram