Categories: CINEMA

இயற்கை கொஞ்சும் எழிலில் குடும்பத்துடன் ஒரு நாள்… வைரலாகும் சினேகா – பிரசன்னா ஜோடியின் Vactaion போட்டோஸ்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து  ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பட்டாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சினேகா.

அவ்வப்பொழுது  தனது குடும்ப புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து  வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தனது குடும்பத்துடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கணவர் பிரசன்ன , மகன் , மகள் என குடும்பத்தோடு இயற்கையின் அழகை ரசித்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

கல்யாணம் முடிந்த மறுநாளே ஹனிமூனா…? காதல் கணவருடன் ரொமான்டிக்.. நடிகை வரலட்சுமி வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமண மற்றும் ரிசப்ஷனை முடித்துவிட்டு காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

10 நிமிடங்கள் ago

U/A சான்றிதழ் கொடுத்ததும்.. இந்தியன் 2 படத்திற்கு 5 முக்கிய கண்டிஷன்களை போட்ட சென்சார் போர்டு.. விழி பிதுங்கி நிற்கும் ஷங்கர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

19 நிமிடங்கள் ago

என் வீட்டுக்கு வெளியே நான்கு மணிநேரம் நள்ளிரவில் காத்திருந்த அஜித்தும் ஷாலினியும்- பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

26 நிமிடங்கள் ago

கமல் முதல் தனுஷ் வரை.. 4 நடிகர்களுக்கு ரெட் கார்டா..? பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் சங்கம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர்கள் சிம்பு, கமலஹாசன், விஷால், தனுஷ் ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக…

47 நிமிடங்கள் ago

அட்ஜஸ்ட்மென்ட் OK சொன்னா சகல வசதி.. அம்மா கேரக்டருக்கு கூட அப்படி.. நடிகை மாலதி ஓபன் டாக்..!!

துணை நடிகையான மாலதி கன்னட திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.…

50 நிமிடங்கள் ago

கமல்ஹாசனை ‘வெள்ளை செந்தில்’ எனக் கலாய்த்த கவுண்டமணி… அதைக் கேள்விப்பட்டு உலகநாயகனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே…

56 நிமிடங்கள் ago