Categories: CINEMA

மாமியார் தலையில் திரும்பவும் மிளகா அரைக்க பார்க்கும் மருமகன்.. அடுத்த படத்துக்கு ரெடியான ஜெயம்ரவி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பு இறுதியாக பெரிதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் வெளியான அகிலன் மற்றும் இறைவன் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில் கடந்த வாரம் ரிலீசான ‘சைரன் 108’ படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

 

இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாசிட்டிவான விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சைரன் திரைப்படம் கல்லா கட்டியதா? என்கிற கேள்விக்கு பதில் இல்லை என்பது தான். மேலும் இந்த படத்தை நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் தான் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  மருமகன் ஜெயம் ரவியை வைத்து இதற்கு முன்னதாக ‘அடங்கமறு’ படத்தை தயாரித்த போது நல்ல வெற்றியும் வசூலும் கிடைத்தது. அதன் பின்னர் ‘பூமி’ படத்தை அவரது மாமியார் தயாரித்தார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

#image_title

இந்நிலையில், சைரன் திரைப்படம் ஒரு வாரத்தில் 8 கோடி செய்துள்ளது என்றும், அதிகபட்சமாக 10 முதல் 15 கோடி வரை வசூல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் அவருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் இன்னொரு படத்தையும் அவர் தயாரிக்க முன் வந்துள்ளார். அடங்கமறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல்  6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க போகிறாராம். இந்த படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார் தான் தயாரிக்க போகிறாராம்.

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

4 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

5 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

5 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

19 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

19 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

20 மணி நேரங்கள் ago